Sunday, December 12, 2021

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா நிகழ்ச்சி 11.12.2021


🗓️ 11.12.2021 (ஹிஜ்ரி 1443  ஜமாத்துல் அவ்வல் பிறை 6) சனிக்கிழமை

⏰ சரியாக மதியம் 
 2.30 மணியளவில்

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
 

Monday, November 15, 2021

அதிகம் ஸலவாத் ஓதிய பாக்கியசாலிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 


தூத்துக்குடி பி & டி காலனி, மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் ஸலவாத்து சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி கடந்த 12.11.2021 வெள்ளி மாலை அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை,

நமது நிஸ்வான் நிறுவனத் தலைவர் மௌலானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த், (தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி) அவர்கள் தலைமையில், நம் நிஸ்வான் டிரஸ்டிகள், நிர்வாகிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Monday, November 8, 2021

உலக மக்களின் நலனுக்காக ஒன்றரை கோடி ஸலவாத் சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி



இடம்: மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

காலம்: 12 .11. 2021 வெள்ளிக்கிழமை மாலை 
அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நோக்கில்

Friday, November 5, 2021

சிறப்பு பயான் நிகழ்ச்சி - 06.11.2021


🗓️ 06.11.2021 சனிக்கிழமை
⏰ மதியம் 3.00 மணி (இன்ஷா அல்லாஹ்)

🔹 சிறப்பு சொற்பொழிவு

மவ்லானா அல்ஹாபிழ் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள் சிறப்புரையாற்றி துஆ செய்தார்கள்.

மதரஸா மாணவிகள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.


🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

Sunday, October 31, 2021

மீலாது சிறப்பு நிகழ்ச்சி 19.10.2021

 

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 19.10.2021 செவ்வாய் அன்று காலை 09:30 மணியளவில் நம் நிஸ்வானில் மீலாது சிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

அந்தப் பகுதி ஆண்களும் பெண்களும் மதரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்பட திரளாகக் கலந்து கொண்டனர்.

ஒரு முழு குர்ஆன் ஓதி கத்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து மவ்லிது ஷரீப், அனைவரும் சேர்ந்து பல நூறு முறை சலவாத்து ஓதி, நிறைவாக துஆ செய்யப்பட்டது. 

Saturday, October 30, 2021

first convocation - 2021 நம் நிஸ்வானின் முதல் பட்டமளிப்பு விழா

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 04.04.2021  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் 2 மாணவிகள் ஆலிமா முஹ்ஸினா பட்டமும்,  
4 மாணவிகள்  முபல்லிஹா பட்டமும் பெற்றார்கள்.
 
இதில் நம் அறக்கட்டளையின் தலைவர் மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் உள்பட கண்ணியமிகு டிரஸ்டிகள், நிர்வாகப் பெருமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், சுற்று வட்டார மக்கள், பெற்றோர்கள், மாணவியர்,
திரளாகக் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் !

நிஸ்வான் நூலகம்

Manbaul Hasanaath Niswan Arabic College

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் (மகளிர்) அரபிக் கல்லூரி

இஸ்லாமிய சமுதாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் நமது பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக மன்பவுல் ஹஸனாத் கல்வி அறக்கட்டளையின் கீழ் 26.02.2018 (ஹிஜ்ரி 10.06.1439) மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி துவங்கியது.

திறமைமிக்க அனுபவமுள்ள உலமாக்கள் ஆலிமாக்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

Friday, October 29, 2021

S.Syed Fathima Samina Alima Muhsina

 S. Syed Fathima Samina  Alima Muhsina 

ஆலிமா செய்யது பாத்திமா ஸமீனா முஹ்ஸினா அவர்கள் 

நம் மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபுக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து கடந்த 2021 ஏப்ரலில் ஆலிமா முஹ்ஸினா பட்டம் பெற்றார்.

தற்பொழுது நமது நிஸ்வானிலேயே ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.


J .sabura buhari sharifa Alima Musliha

 ஜா.சபுரா புஹாரி ஷரிஃபா ஆலிமா முஸ்லிஹா

தூத்துக்குடி ரஹ்மத் நகர் இஸ்லாஹுல் பனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து 2016 - இல் ஆலிமா ஸனது (Diploma) பெற்றார்.

கல்வி பயின்று முடிந்ததும். அதே மதரஸாவில் 2 ½ வருடம் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து நமது P & T காலனி, "மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூாரி" யில் ஆசிரியையாகப்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அல்ஹம்து லில்லாஹ் !

Moulavi Alhafil J.Samsudeen Maslahi B.A.,


மவ்லவி அல்ஹாபிழ் J.சம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக் குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.

 2000 ல் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் மதரஸா  ஜாமிவுல் அன்வாரில் ஹாபிழ் பட்டம் பெற்றார்கள்.

பின்னர், 2001- 2007 வரை தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் பயின்று 2007ல்  ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

அதே ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் (University of Madras) B.A.,முடித்தார்கள்.

Thursday, October 28, 2021

நபி வாழும் மா மதினா - Nabi Vaazhum Maamadhina Tamil Islamic Song


 நபி வாழும் மா மதினா
நான் அங்கு வருவேனா
பூ மணக்கும் உங்கள் ரவ்ளா
கண்ணால் நான் தழுவேனா
நபி உம்மைக் காணத்தான் 
என் ஜீவன் வாழுது 
விடுகின்ற மூச்செல்லாம் 
உம் வதனம் தேடுது

ஜவஹர் இஸ்லாமிக் சென்டர் - Islamic Shop In Thoothukudi

 தூத்துக்குடி அண்ணா நகரில் ஜவஹர் இஸ்லாமிக் சென்டர்


எங்களிடம் குர்ஆன், ரேகாலி, தொப்பி பர்தா, ஷால் வகைகள், மக்கன்னா,

இஹ்ராம் உடைகள், அத்தர், லுங்கி, ஹதீஸ் நூற்கள், தஸ்பீஹ்மணி, அரபு நாட்டு பேரீத்தம் பழம், மதரஸா பாட கிதாப்கள்,

Wednesday, October 27, 2021

Moulavi S.S.Abubakar Sithik Maslahi B.A.,


மவ்லவி S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A., அவர்கள்

தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று1996 ல் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் வந்து சேர்ந்தார்கள்.

 1999 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2006 ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

 சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஏ.(அரபிக்)பட்டப்படிப்பு நிறைவு செய்தார்கள்.

Friday, October 22, 2021

அஸ்மாவுல் ஹுஸ்னா ராத்திப் - Ratib Asmaul Husnah download link



நம் நிஸ்வானில் வாராந்திர சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ராத்திப் அஸ்மாவுல் ஹுஸ்னா ஓதப்படும். 

ஓதுவதற்கும் கேட்பதற்கும் ரம்மியமான இந்த ராத்திப் தேவையுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். download

Monday, October 18, 2021

மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி - 2021

 மீலாதுந் நபி விழா சிறப்பு நிகழ்ச்சி
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

19.10.2021 செவ்வாய் காலை 9.30 மணி

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி

🔹 குர்ஆன் திலாவத் மஜ்லிஸ்
🔹 சுப்ஹான மவ்லிது ஷரீஃப்
🔹 ஸலவாத் ஓதுதல்
🔹 சிறப்பு துஆ

Friday, October 15, 2021

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் மவ்லிது ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி



இன்ஷா அல்லாஹ்,
🗓️ 16.10.2021 சனிக்கிழமை
⏰ மதியம்  2.30 - 5.00 மணி வரை

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

J.ரஜப் நிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- நாயகத்தின் ﷺ நற்பண்புகள்

Friday, October 8, 2021

பெண்கள் பயான் மற்றும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் (09.10.2021)



🗓️ 09.10.2021 சனிக்கிழமை
 மதியம்  2.30 – 5.00 மணிவரை.
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி, தூத்துக்குடி.
 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
I. ஸாலிஹா
(2-ம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு :- அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் !
S. சுமைய்யா மிஃராஜ்
(1-ம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- பொறுமை

Saturday, October 2, 2021

கேள்வி பதில் 25.09.2021


 ஒரு மனித மூளையிலுள்ள நினைவாற்றல் memory Power அளவு என்ன ?

2.5 மில்லியன் GB

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் 2 நிலைகளில் அல்லது சந்தர்ப்பங்களில் தூரமான காட்சிகளையும் மறைவான காட்சிகளையும் மனக் கண்ணால் (ரூஹ்) காணக் கூடிய வாய்ப்பு உண்டு. 

அவை என்ன ?

சக்ராத்துல் மவ்த் துடைய நிலையில் உறுப்புகள் சலனமற்று இருக்கும் கண்கள் மூடி இருக்கும் உயிர் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில்,

فكشفنا عنك غطائك فبصرك اليوم حديد

என்று அல்லாஹ் கூறுகிறான் இந்த நேரத்தில் உன் திரையை அகற்றி விட்டோம் இப்பொழுது உன் அகக் கண்ணின் பார்வை கூர்மையாக இருக்கிறது

இந்த நிலையில் அவன் நல்லவனாக இருந்தால் சொர்க்கத்தின் இன்பமான காட்சிகளை அவன் காண்பான். கெட்டவனாக இருந்தால் நரகத்தின் கொடூரக் காட்சிகளை காண்பான் ஆனால் அதை அவனால் பேச முடியாது.

இரண்டாவது நிலை : தூக்கம் 

ஒரு மனிதன் தூங்குகிற பொழுதும் உறுப்புகள் சலனமற்று இருக்கிறது கண்கள் மூடி இருக்கிறது ஆனால் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் அவன் கனவில் தூர தூரமான காட்சிகளையும் மறைவான காட்சிகளையும் பார்க்கிறான்

பல நாடுகளின் காட்சி பல இடங்களின் காட்சி .. ஏன் மறுமை வரைக்கும் கூட கனவில் காண முடிகிறது.

இந்த இரண்டு நிலைகளிலும் உள்ள அந்த மவுன நிலையை அடிப்படையாக வைத்து, 

 முராக்கபா என்ற தியானத்தை அமைதியான நேரத்தில் செய்துவந்தால், அகக் கண்ணை மூடி இருக்கிற திரை விலகி அற்புதமான காட்சிகளை பார்க்கவும் படிக்கவும் இயலும்

சரியான பதில் எழுதிய அறிவுஜீவிகள்

சாலிஹா

A. ஆயிஷா பேகம்

ஆயிஷா பீவி

சுமைய்யா மிஃராஜ் 

சிலர் 1 கேள்விக்கு மட்டும் சரியான விடை எழுதியிருந்தனர். 

பதில் எழுதிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக !


வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா நிகழ்ச்சி - 4



🗓️ 02.10.2021 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 
 2.30 - 5.00 மணி வரை 

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

M . ஆயிஷா பீவி
(முதலாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:- அகிலத்திற்கு ஓர் அருட்கொடை

M. ஜன்னத்துல் ரிஃபாயா
(முதலாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு :- ஸதகாவின் சிறப்பு

A . ஆயிஷா பேகம்
(முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு: குர்ஆன் ஓதுவதின் சிறப்பு.

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல் ஹாஃபிழ் S.S.செய்யிது அபூபக்கர் சித்தீக் மஸ்லஹி B.A. (Arabic)  அவர்கள்
(பேராசிரியர், MH நிஸ்வான், P & T காலனி, தூத்துக்குடி)
📝  தலைப்பு:
  வள்ளல் நபி யைப் போல வாழ்வோம் வாருங்களேன் !

⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 அருமையான  அஸ்மாவுல் ஹுஸ்னாவுடன் சமூகத்தின் நலனுக்காக சிறப்பு துஆ  செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Thursday, September 30, 2021

Moulavi S.S.Abdur Rahman Maslahi Fazil Deoband

 

மவ்லவி S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள்
தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று
1988 ல் தஞ்சாவூர் ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் சேர்ந்தார்கள்.
 
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் 1992 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2002ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.
அதன் பின்னர் தாருல் உலூம் தேவ்பந்த் பல்கலைக் கழகத்தில் ஃபாழில் பட்டம் பெற்று மார்க்கச் சேவையில் நுழைந்தார்கள்.

Friday, September 24, 2021

பெண்கள் பயான் மற்றும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் 3

 

🗓️ 25.09.2021 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 
 2.30 மணியளவில்

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

S. சுமைய்யா மிஃராஜ்
 (முதல் வருட ஆலிமா மாணவி
தலைப்பு :- வெட்கம்

J.ரஜப் நிஷா  ( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : - ஸலவாத்தின் சிறப்பு

S. ஸாஹின் பானு
(முதலாம் ஆண்டு முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- உறவைப் பேணுவோம்.

S. ஆமீனா  (முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- ஆயத்தல் குர்ஸி

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
📝  தலைப்பு:
  வேண்டுமா சுவனம்? வேண்டும் கவனம் !

⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 பூமான் நபி ﷺ அவர்களின் மீது புர்தா ஷரீப் ஓதப்படும்
 
⏲️ 4.30 மணிக்கு
🤲 
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Tuesday, September 21, 2021

விரோதியை வெல்ல.. வியாதியைக் கொல்ல.. இதை வழக்கப் படுத்துங்களேன்!

 


அல்லாமா இமாம் கஸ்ஸாலி  (ரஹ்) கூறுகின்றார்கள்:

ஒரு அனுபவபூர்வமான குறிப்பு

கஷ்டங்கள் நீங்குவதற்கும் எதிரிகளை பலம் குன்றச் செய்வதற்கும் சுருக்கமாகச் சொன்னால் விரோதியை வெல்லவும் வியாதியை விரட்டவும் அற்புதமான ஒரு டிப்ஸ்.


சுபுஹு தொழுகையின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் முதலாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்குப் பிறகு அலம் நஷ்ரஹ் என்ற சூராவையும் இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூரா வுக்குப் பிறகு அலம் தர கைஃப என்று சூராவையும் வழமையாக ஓதி வந்தால் இந்தப் பலன்கள்  கிடைப்பது நிச்சயம் சந்தேகமே வேண்டாம் !


யார் இந்த இரண்டு ரக்அத்துகளில் “அலம் அலம்” என்ற இந்த இரண்டு சூராவையும் ஓதுகின்றாரோ அந்த நாளில் அவருக்கு எந்த الم  வலி வேதனை வருத்தமும் இருக்காது


இதை வழக்கப் படுத்திய நல்லவர்கள் பலரும் தங்கள் அனுபவத்தை சொல்லி இருக்கிறார்கள் குறிப்பாக மூலவியாதி அதனுடைய வலியும் வருத்தமும் குறைந்து முற்றிலும் இல்லாமல் போன அனுபவங்கள் உண்டு; பகைமை குறைந்து பாசம் அதிகரித்த அனுபவங்கள் உண்டு!

ذَكَرَ الْعَلَّامَةُ الْغَزَالِيُّ فِي كِتَابِ وَسَائِلِ الْحَاجَاتِ وَآدَابِ الْمُنَاجَاةِ مِنْ الْإِحْيَاءِ

 أَنْ مِمَّا جُرِّبَ لِدَفْعِ الْمَكَارِهِ وَقُصُورِ يَدِ كُلِّ عَدُوٍّ وَلَمْ يَجْعَلْ لَهُمْ إلَيْهِ سَبِيلًا قِرَاءَةُ {أَلَمْ نَشْرَحْ} [الشرح: 1] وَ {أَلَمْ تَرَ كَيْفَ} [الفيل: 1] فِي رَكْعَتَيْ الْفَجْرِ قَالَ وَهَذَا صَحِيحٌ لَا شَكَّ فِيهِ.

(و) ركعتان قبل (صبح)، ويسن تخفيفهما.

وقراءة الكافرون والاخلاص فيهما، لخبر مسلم وغيره، وورد أيضا فيهما ألم نشرح لك وألم تر كيف، وأن من داوم على قراءتهما فيهما زالت عنه علة البواسير

 

من صلاهما بألم وألم لم يصبه في ذلك اليوم ألم.

وحَدثني أَبُو الْفضل مُحَمَّد عبد الله بن الْمَرْزُبَان الشِّيرَازِيّ الْكَاتِب، فِي المذاكرة، فِي خبر طَوِيل، لست أقوم على حفظه: أَن رجلا كَانَت بَينه وَبَين رجل مُتَمَكن من أَذَاهُ عَدَاوَة، فخافه خوفًا شَدِيدا، وأهمه أمره، وَلم يدر مَا يصنع.

فَرَأى فِي مَنَامه، كَانَ قَائِلا يَقُول لَهُ: اقْرَأ فِي كل يَوْم، فِي إِحْدَى رَكْعَتي صَلَاة الْفجْر، ألم تَرَ كَيفَ فعل رَبك بأصحاب الْفِيل إِلَى آخر السُّورَة.

قَالَ: فقرأتها، فَمَا مَضَت إِلَّا شهور، حَتَّى كفيت أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله تَعَالَى، فَأَنا أقرؤها إِلَى الْآن.

قَالَ مؤلف هَذَا الْكتاب: دفعت أَنا إِلَى شدَّة لحقتني شَدِيدَة، من عَدو، فاستترت مِنْهُ، فَجعلت دأبي قِرَاءَة هَذِه السُّورَة فِي الرَّكْعَة الثَّانِيَة من صَلَاة الْفجْر، فِي كل يَوْم، وَأَنا أَقرَأ فِي الأولة مِنْهَا: ألم نشرح لَك صدرك إِلَى آخر السُّورَة، لخَبر كَانَ بَلغنِي أَيْضا فِيهَا، فَلَمَّا كَانَ بعد شهور، كفاني الله أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله من غير سعي لي فِي ذَلِك، وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه، وَأَنا أقرؤها فِي رَكْعَتي الْفجْر إِلَى الْآن. كتاب: الفرج بعد الشدة للتنوخي

 

Sunday, September 19, 2021

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் - 2



நாள்: 18.09.2021 சனிக்கிழமை 
நேரம்: சரியாக மதியம்  2.30 மணியளவில் 
இடம்: மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,  p&t காலனி 
 

கஷ்டங்கள் கவலைகள் போக்கும் சுலபமான (மந்திரம்) கலிமா




 கஷ்டங்கள் கவலைகள் போக்கும்  சுலபமான (மந்திரம்) கலிமா 
 
அலி ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் கஷ்டத்தில் விழுந்தால் அதிலிருந்து விடுதலை ஆவதற்கு சொல்லும் வார்த்தையை உமக்குக் கற்று தரட்டுமா?
 
அல்லாஹ்வின் தூதரே ! அவசியம் சொல்லித் தாருங்கள்!அல்லாஹ் என்னையே  தங்களுக்கு அர்ப்பணமாக ஆக்கட்டும்!  எத்தனையோ நல்ல காரியங்களை நீங்கள் தானே எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் அதே போல இதையும் சொல்லுங்கள்.
 
ஏதேனும் ஒரு கஷ்டத்தில் நீர் சிக்கிக்கொண்டால் சொல்ல வேண்டிய வார்த்தை
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்
 
இதைக் கூறினால்  அனைத்து வகையான துன்பங்கள், துயரங்களை விட்டும் அல்லாஹ் உம்மைக்  காப்பாற்றுவான்
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்பது தொண்ணூற்று  ஒன்பது நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் ஆக குறைந்தது கவலையாகும்.
 
إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ
عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ قُلْتَهَا» قُلْتُ: بَلَى جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، فَرُبَّ خَيْرٍ قَدْ عَلَّمْتَنِيهِ، قَالَ: " إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ فَقُلْ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَصْرِفُ بِهَا مَا شَاءَ مِنْ أَنْوَاعِ الْبَلَاءِ 
 
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَيْسَرُهَا الْهَمُّ»

Saturday, September 18, 2021

கேள்வியும் பதிலும் - 2

 கேள்வி : 2

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த வாரம் 11 செப்டம்பர் 2011 சனி மதியம் நமது நிஸ்வான் 

மதரசாவில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சிறப்புரையிலிருந்து 

கேட்கப்பட்ட கேள்விகள் :

 

  1. கஸீதத்துல் புர்தாவை இயற்றிய கவிஞர் யார் ?

 

2.        டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது 

இந்த மன்னரின் கனவில் நபியவர்களே வந்து 

இந்த இடத்தில் தோண்டினால் நல்ல தண்ணீர் வரும் 

என்று கூறியதற்கு இணங்க அங்கு தோண்டப்பட்டு

 குத்பு சாகிப் குளம்என்ற 

பெயரில் அந்த இடம் அழைக்கப்படுகிறது.

 நபி அவர்கள் மீது தீராத காதல் கொண்டு அதிகம்

 ஸலவாத்து ஓதுவது 

வழக்கமாக வைத்திருந்த அந்த மன்னர் யார் ?

 

  1. அல்லாமா ஷரபுத்தீன் அல் பூஸிரி (ரஹ்)

 

2.        மாமன்னர் இல்துமிஷ் 


சரியான விடை எழுதிய அறிவுஜீவிகள் :

ஆயிஷா பேகம் 

சாலிஹா 

ஸமீனா முஹ்ஸினா

 

பாத்திமா ஃபர்ஹானா ஜுவைரிய்யா 

பைரோஸ் நிஹார்

 ஆயிஷா பீவி 

சுமையா மிஃராஜ் 

ஸஃப்ரின் பர்வீன்

 ரஜபுன் நிஷா 

S. ஷாஹீன்

இவர்களில் மூவரை குலுக்கல் முறையில் 

தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது.

 பதில் எழுதிய அனைவருக்கும் அல்லாஹ் 

பேரருள் புரிவானாக