கஷ்டங்கள் கவலைகள்
போக்கும் சுலபமான (மந்திரம்)
கலிமா
அலி ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில்
கஷ்டத்தில் விழுந்தால் அதிலிருந்து விடுதலை ஆவதற்கு சொல்லும் வார்த்தையை உமக்குக்
கற்று தரட்டுமா?
அல்லாஹ்வின் தூதரே ! அவசியம் சொல்லித் தாருங்கள்!அல்லாஹ்
என்னையே
தங்களுக்கு அர்ப்பணமாக ஆக்கட்டும்! எத்தனையோ நல்ல காரியங்களை நீங்கள் தானே எனக்கு கற்றுக் கொடுத்து
இருக்கிறீர்கள் அதே போல இதையும் சொல்லுங்கள்.
ஏதேனும் ஒரு கஷ்டத்தில் நீர் சிக்கிக்கொண்டால் சொல்ல
வேண்டிய வார்த்தை
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ
وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா
பில்லாஹில் அலிய்யில் அழீம்
இதைக் கூறினால் அனைத்து
வகையான துன்பங்கள், துயரங்களை விட்டும் அல்லாஹ்
உம்மைக்
காப்பாற்றுவான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா
பில்லாஹ்' என்பது தொண்ணூற்று ஒன்பது
நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் ஆக குறைந்தது கவலையாகும்.
إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ
عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً إِذَا وَقَعْتَ فِي
وَرْطَةٍ قُلْتَهَا» قُلْتُ: بَلَى جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، فَرُبَّ خَيْرٍ قَدْ
عَلَّمْتَنِيهِ، قَالَ: " إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ فَقُلْ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا
بِاللَّهِ الْعَظِيمِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَصْرِفُ بِهَا مَا شَاءَ مِنْ أَنْوَاعِ الْبَلَاءِ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا
بِاللَّهِ دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَيْسَرُهَا الْهَمُّ»

No comments:
Post a Comment