Activities

நம் நிஸ்வான் அன்றாட அமல்கள்  Activities

திங்கள் முதல் சனி வரை :

தினமும் காலை 9:15 மணி முதல் 9:30 வரை
பிரேயர் - துஆ மஜ்லிஸ், பிரார்த்தனை.

காலை 9:30 முதல் மதியம் 12:40 வரை காலை பாட நேரம்.
இடையில் 15 நிமிடங்கள் ளுஹா தொழுகை இடைவேளை.

மதியம் 12:40 முதல் 2:30 மணி வரை ஓய்வு.
ழுஹர் தொழுகை மற்றும் மதிய உணவு இடைவேளை.

பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாட நேரங்கள் ஆகும்.

அதைத்தொடர்ந்து அசர் தொழுகை.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மதியம் 2:30 மணிக்கு வாராந்திர சிறப்பு பயான் மற்றும் திக்ரு அல்லது புர்தா மஜ்லிஸ்.

அதில் ஆரம்பமாக நம் மாணவியர் பங்குபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் உண்டு.

இதர அமல்கள்:
 
ஐங்காலத் தொழுகையுடன் சுன்னத்தான தொழுகைகளையும் பேண வைப்பதுடன, தஹஜ்ஜத் தொழுகையைக் கடைபிடிக்கத் தூண்டுதல்.

ஒவ்வொரு மாதத்திலும் பிறை 13, 14, 15 ஆகிய பவுர்ணமி நாட்களில்

الأيام البيض

நோன்பு வைக்கச் செய்வதுடன் மற்ற சுன்னத்தான நோன்புகளையும் நோற்கும் படி ஆர்வப் படுத்துதல்.

மாணவியரின் மார்க்க அறிவை வளர்த்திட தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு (செமினார்) ஒரு நாள் பயிலரங்க வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படுதல்.

மார்க்க அறிவுடன் நல்வழியில் நடக்கும் சிறந்த பட்டதாரிகளை உருவாக்கி நல்லொழுக்கமுள்ள பெண் மக்களை சமுதாயத்திற்கு வழங்குவதே எம் கல்லூரியின் நோக்கம். 

இன்னும் பல அறிஞர்களின் நல்ல ஆலோசனையைப் பெற்று மார்க்கக் கல்வியிலும் சேவைகளிலும் சிறந்து விளங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும் இன்ஷா அல்லாஹ் !

No comments:

Post a Comment