Showing posts with label துஆ. Show all posts
Showing posts with label துஆ. Show all posts

Saturday, October 22, 2022

முப்பெரும் விழா - 2022

தூத்துக்குடி P & T காலனி
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி நடத்தும்
முப்பெரும் விழா

  • மீலாது விழா,
  • ஸலவாத் சமர்ப்பணம் மற்றும்
  • நிஸ்வான் மாணவியர் பல்சுவை நிகழ்ச்சி

பேரன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தாலும் இன்ஷா அல்லாஹ் நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1444ம் வருடம் ரபீவுல் அவ்வல் பிறை 29 (26.10.2022) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் முப்பெரும் விழா நடைபெற இருப்பதால் அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அல்ஹம்துல்லாஹ்!


முதல் அமர்வு

இன்ஷா அல்லாஹ்...
நாள் : 26.10.2022 புதன்கிழமை
(ஹிஜ்ரி 1444 ரபீவுல் அவ்வல் பிறை 29)

காலை 9.30 மணிக்கு

இடம் :மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
மதரஸா பாட ஹால், P&T காலனி, தூத்துக்குடி.


தலைமை: மௌலவி, அல்ஹாபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி அவர்கள்
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)

முன்னிலை : அல்ஹாஜ். S. செய்யது கவுஸ் அபுபக்கர் அவர்கள்
(தலைவர். அல்மஸ்ஜிதுன் நூர். P&T காலனி)

கிராஅத்:
J.ரஜப் நிஷா (2ம் வருட ஆலிமா மாணவி)

கீதம்: மதரஸா மாணவிகள்

வாழ்த்துரை :
மௌலவி, அல்ஹாபிழ். S.S. அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A., Arabic., அவர்கள்
ஆலிமா. J. சபுரா புஹாரி ஷரிபா முஸ்லிஹா அவர்கள்
ஆலிமா. S. செய்யது பாத்திமா ஸமீனா முஹ்ஸினா அவர்கள் (பேராசிரியர்கள், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&T காலனி)

நடுவர் : மௌலவி, அல்ஹாபிழ். S.A. முஹம்மது ஹுசைன் மஸ்லஹி அவர்கள்
(இமாம். மஸ்ஜித் பிலால், பிரையண்ட் நகர்)


பயான் போட்டி

J. ரஜப் நிஷா (2ம் ஜும்ரா மாணவி)
தலைப்பு : நபி (ஸல்) அவர்கள் ஒழித்த “வட்டி”

S.மீரா பானு (1ம் ஜும்ரா மாணவி)
தலைப்பு : நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய "நற்குணம்"

S செய்யது ரோஷன் ஷபீக்கா (முதல் ஜும்ரா மாணவி)
தலைப்பு : நபி (ஸல்) அவர்கள் ஒழித்த "மூடநம்பிக்கை”

A.ஆயிஷா (2ம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : நபி (ஸல்) அவர்கள் ஒழித்த “போதை"

N. முபீனா பேகம் (2ம் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு : நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய "கல்விப் புரட்சி"

கிராஅத் போட்டி

I.ஸாலிஹா (3ம் வருட ஆலிமா மாணவி)
M. ஆயிஷா பீவி (2ம் வருட ஆலிமா மாணவி)
J. ரஜப் நிஷா (2ம் வருட ஆலிமா மாணவி)
J. ஜுவைரிய்யா (ஹாபிழா மாணவி)
N. பைரோஸ் நிஹார் (ஹாபிழா மாணவி)
M. ஸாப்ரின் பர்வீன் (2ம் வருட முபல்லிகா மாணவி)
S. முஹம்மது புஹாரி ஆப்ரின் (Iம் வருட ஆலிமா மாணவி)
N. முபீனா பேகம் (2ம் வருட முபல்லிகா மாணவி)

வினாடி வினா போட்டி
(பிக்ஹ் மார்க்க சட்டத்தின் அடிப்படையில்)

G. ஸாஹின் (1ம் வருட ஆவிமா மாணவி)
M. ஸாஜிதா (குர்ஆன் திலாவத் மாணவி)
B. நபீஷா பாத்திமா (1ம் வருட முபல்லிகா மாணவி)
S. ரசூல் பாத்திமா (1ம் வருட முபல்லிகா மாணவி)

இரண்டாம் அமர்வு

நாள் 26.10.2022 புதன்கிழமை
(ஹிஜ்ரி 1444 ரபீவுல் அவ்வல் பிறை 29)
மதியம் 2.30 மணிக்கு

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
மதரஸா பாட ஹால்
P &T காலனி

தலைமை: மௌலவி. அல்ஹாபிழ், அல்ஹாஜ் S. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி M.A., அவர்கள்
(நிறுவனத் தலைவர் & முதல்வர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&T காலனி.)

கிராஅத்: M.ஆயிஷா பீவி (2ம் வருட ஆலிமா மாணவி)

கீதம்: மதரஸா மாணவிகள்

வாழ்த்துரை : மௌலவி அல்ஹாபிழ். S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள் (பேராசிரியர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P&T காலனி)

பட்டிமன்றம்

நடுவர் : மௌலவி அல்ஹாபிழ். அல்ஹாஜ்.
K.A.அப்துல் அழீம் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி M.A., அவர்கள்
(தலைமை இமாம், ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி)


தலைப்பு:
இன்றைய நம் இல்லங்களில் நிறைந்திருப்பது
அந்நியக் கலாச்சாரமா? இஸ்லாமியக் கலாச்சாரமா?


அந்நியக் கலாச்சாரமே!
அணி தலைவி I. ஸாலிஹா (3ம் வருட ஆலிமா மாணவி)

அணி பேச்சாளர்கள்:
S. முஹம்மது புஹாரி ஆப்ரின் (1ம் வருட ஆலிமா மாணவி)
S.பீமா பீவி (1ம் வருட ஆலிமா மாணவி)

இஸ்லாமியக் கலாச்சாரமே!
அணி தலைவி : M.ஆயிஷா பீவி (2ம் வருட ஆலிமா மாணவி)

அணி பேச்சாளர்கள்
S. ஷம்சு பீவி (1ம் வருட ஆலிமா மாணவி)
M. ஸாப்ரின் பர்வீன் (2ம் வருட முபல்லிகா மாணவி)

அஸர் தொழுகைக்குப் பின் : 1.5 கோடி ஸலவாத் சமர்ப்பணம்

ஸலவாத்தின் சிறப்பு:
மௌலவி. அல்ஹாஜ் M.இம்தாதுல்லாஹ் பாகவி அவர்கள்
(ஆலோசகர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி, P&T காலனி)

நன்றியுரை: அல்ஹாஜ். B. முஜீபுர் ரஹ்மான் B.Com., அவர்கள்
(செயலாளர், மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&T காலனி)

சிறப்பு துஆ:
மௌலவி. அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி
(தலைவர். மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி)

அழைப்பின் மகிழ்வில்,
முதல்வர், நிரவாகக் குழு, பேராசியர்கள்
மற்றும் மாணவிகள்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P&T காலனி, தூத்துக்குடி.


Monday, November 15, 2021

அதிகம் ஸலவாத் ஓதிய பாக்கியசாலிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 


தூத்துக்குடி பி & டி காலனி, மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் ஸலவாத்து சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி கடந்த 12.11.2021 வெள்ளி மாலை அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை,

நமது நிஸ்வான் நிறுவனத் தலைவர் மௌலானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த், (தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி) அவர்கள் தலைமையில், நம் நிஸ்வான் டிரஸ்டிகள், நிர்வாகிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Tuesday, September 21, 2021

விரோதியை வெல்ல.. வியாதியைக் கொல்ல.. இதை வழக்கப் படுத்துங்களேன்!

 


அல்லாமா இமாம் கஸ்ஸாலி  (ரஹ்) கூறுகின்றார்கள்:

ஒரு அனுபவபூர்வமான குறிப்பு

கஷ்டங்கள் நீங்குவதற்கும் எதிரிகளை பலம் குன்றச் செய்வதற்கும் சுருக்கமாகச் சொன்னால் விரோதியை வெல்லவும் வியாதியை விரட்டவும் அற்புதமான ஒரு டிப்ஸ்.


சுபுஹு தொழுகையின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் முதலாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்குப் பிறகு அலம் நஷ்ரஹ் என்ற சூராவையும் இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூரா வுக்குப் பிறகு அலம் தர கைஃப என்று சூராவையும் வழமையாக ஓதி வந்தால் இந்தப் பலன்கள்  கிடைப்பது நிச்சயம் சந்தேகமே வேண்டாம் !


யார் இந்த இரண்டு ரக்அத்துகளில் “அலம் அலம்” என்ற இந்த இரண்டு சூராவையும் ஓதுகின்றாரோ அந்த நாளில் அவருக்கு எந்த الم  வலி வேதனை வருத்தமும் இருக்காது


இதை வழக்கப் படுத்திய நல்லவர்கள் பலரும் தங்கள் அனுபவத்தை சொல்லி இருக்கிறார்கள் குறிப்பாக மூலவியாதி அதனுடைய வலியும் வருத்தமும் குறைந்து முற்றிலும் இல்லாமல் போன அனுபவங்கள் உண்டு; பகைமை குறைந்து பாசம் அதிகரித்த அனுபவங்கள் உண்டு!

ذَكَرَ الْعَلَّامَةُ الْغَزَالِيُّ فِي كِتَابِ وَسَائِلِ الْحَاجَاتِ وَآدَابِ الْمُنَاجَاةِ مِنْ الْإِحْيَاءِ

 أَنْ مِمَّا جُرِّبَ لِدَفْعِ الْمَكَارِهِ وَقُصُورِ يَدِ كُلِّ عَدُوٍّ وَلَمْ يَجْعَلْ لَهُمْ إلَيْهِ سَبِيلًا قِرَاءَةُ {أَلَمْ نَشْرَحْ} [الشرح: 1] وَ {أَلَمْ تَرَ كَيْفَ} [الفيل: 1] فِي رَكْعَتَيْ الْفَجْرِ قَالَ وَهَذَا صَحِيحٌ لَا شَكَّ فِيهِ.

(و) ركعتان قبل (صبح)، ويسن تخفيفهما.

وقراءة الكافرون والاخلاص فيهما، لخبر مسلم وغيره، وورد أيضا فيهما ألم نشرح لك وألم تر كيف، وأن من داوم على قراءتهما فيهما زالت عنه علة البواسير

 

من صلاهما بألم وألم لم يصبه في ذلك اليوم ألم.

وحَدثني أَبُو الْفضل مُحَمَّد عبد الله بن الْمَرْزُبَان الشِّيرَازِيّ الْكَاتِب، فِي المذاكرة، فِي خبر طَوِيل، لست أقوم على حفظه: أَن رجلا كَانَت بَينه وَبَين رجل مُتَمَكن من أَذَاهُ عَدَاوَة، فخافه خوفًا شَدِيدا، وأهمه أمره، وَلم يدر مَا يصنع.

فَرَأى فِي مَنَامه، كَانَ قَائِلا يَقُول لَهُ: اقْرَأ فِي كل يَوْم، فِي إِحْدَى رَكْعَتي صَلَاة الْفجْر، ألم تَرَ كَيفَ فعل رَبك بأصحاب الْفِيل إِلَى آخر السُّورَة.

قَالَ: فقرأتها، فَمَا مَضَت إِلَّا شهور، حَتَّى كفيت أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله تَعَالَى، فَأَنا أقرؤها إِلَى الْآن.

قَالَ مؤلف هَذَا الْكتاب: دفعت أَنا إِلَى شدَّة لحقتني شَدِيدَة، من عَدو، فاستترت مِنْهُ، فَجعلت دأبي قِرَاءَة هَذِه السُّورَة فِي الرَّكْعَة الثَّانِيَة من صَلَاة الْفجْر، فِي كل يَوْم، وَأَنا أَقرَأ فِي الأولة مِنْهَا: ألم نشرح لَك صدرك إِلَى آخر السُّورَة، لخَبر كَانَ بَلغنِي أَيْضا فِيهَا، فَلَمَّا كَانَ بعد شهور، كفاني الله أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله من غير سعي لي فِي ذَلِك، وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه، وَأَنا أقرؤها فِي رَكْعَتي الْفجْر إِلَى الْآن. كتاب: الفرج بعد الشدة للتنوخي

 

Sunday, September 19, 2021

கஷ்டங்கள் கவலைகள் போக்கும் சுலபமான (மந்திரம்) கலிமா




 கஷ்டங்கள் கவலைகள் போக்கும்  சுலபமான (மந்திரம்) கலிமா 
 
அலி ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் கஷ்டத்தில் விழுந்தால் அதிலிருந்து விடுதலை ஆவதற்கு சொல்லும் வார்த்தையை உமக்குக் கற்று தரட்டுமா?
 
அல்லாஹ்வின் தூதரே ! அவசியம் சொல்லித் தாருங்கள்!அல்லாஹ் என்னையே  தங்களுக்கு அர்ப்பணமாக ஆக்கட்டும்!  எத்தனையோ நல்ல காரியங்களை நீங்கள் தானே எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் அதே போல இதையும் சொல்லுங்கள்.
 
ஏதேனும் ஒரு கஷ்டத்தில் நீர் சிக்கிக்கொண்டால் சொல்ல வேண்டிய வார்த்தை
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்
 
இதைக் கூறினால்  அனைத்து வகையான துன்பங்கள், துயரங்களை விட்டும் அல்லாஹ் உம்மைக்  காப்பாற்றுவான்
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்பது தொண்ணூற்று  ஒன்பது நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் ஆக குறைந்தது கவலையாகும்.
 
إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ
عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ قُلْتَهَا» قُلْتُ: بَلَى جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، فَرُبَّ خَيْرٍ قَدْ عَلَّمْتَنِيهِ، قَالَ: " إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ فَقُلْ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَصْرِفُ بِهَا مَا شَاءَ مِنْ أَنْوَاعِ الْبَلَاءِ 
 
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَيْسَرُهَا الْهَمُّ»

Saturday, September 18, 2021

இதை வழமைப் படுத்தினால் வாழ்க்கையே மாறும் !


أن رجلاً جاء إلى رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: تولت عني الدنيا وقلت ذات يدي، فقال له رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فأين أنت من صلاة الملائكة وتسبيح الخلائق وبها يرزقون» ، قال فقلت: وما هي يا رسول الله؟ قال: «سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله مائة مرة ما بين طلوع الفجر إلى أن تصلي الصبح، تأتيك الدنيا راغمة صاغرة، ويخلق الله من كل كلمة ملكاً يسبح الله إلى يوم القيامة لك ثوابه»
 ஒரு தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே ! இந்த உலகம் என்னை விட்டும் முகம் திருப்பிக் கொண்டது.. பொருளாதாரம் குறைவாக இருக்கிறது" என்று முறையிட்டபோது

அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : அனைத்து வானவர்களும் ஓதக் கூடிய ஒரு பிரார்த்தனை, அனைத்து ஜீவராசிகளும் சொல்லக்கூடிய தஸ்பீஹ் ! அது உனக்கு தெரியாதா ? அதை அனைத்து படைப்புகளும் ஓதுகிற காரணத்தினால்தான் அவைகளுக்கு இரண பாக்கியம் இறங்குகிறது

"நாயகமே ! அது என்ன ?"


அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி சலாம் சொன்னார்கள்
سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ் (100)
இதை ஒவ்வொரு நாளும் ஃபஜ்ரு உதயமாகும் நேரம் தொடுத்து பஜ்ரு தொழுகை முடிகிற அந்த நேரத்திற்குள் நூறு தடவை வழமையாக ஓதி வா ! இந்த உலகம் உனக்காக பணிந்து வரும் !"
அவர் சொல்கிறார்: இதை அந்த குறிப்பிட்ட நேரத்தில் நான் வழமையாக ஓதிவந்தேன். என்ன ஆச்சரியம் ! அல்லாஹ் என் மீது இரண பாக்கியத்தை அள்ளிக் கொட்டினான். இப்பொழுது நிறைய குவிந்து விட்டது அந்த செல்வத்தை எல்லாம் எங்கே வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சிறிது நாளைக்கு முன்பு வரை அல்லாஹ்வின் தூதரே எனக்கு என்ன வழி தெரியவில்லை என்று கவலையோடு வந்தார். இப்பொழுது சொல்லுகிறார் பணத்தை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று

அவருடைய வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போனதற்கு என்ன காரணம் ? அவர் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து வழமையாக ஓதி வந்த அந்ததிக்ருதான் !