Monday, November 15, 2021

அதிகம் ஸலவாத் ஓதிய பாக்கியசாலிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 


தூத்துக்குடி பி & டி காலனி, மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் ஸலவாத்து சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி கடந்த 12.11.2021 வெள்ளி மாலை அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை,

நமது நிஸ்வான் நிறுவனத் தலைவர் மௌலானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த், (தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி) அவர்கள் தலைமையில், நம் நிஸ்வான் டிரஸ்டிகள், நிர்வாகிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


மவ்லானா இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத் (ஆலோசகர், MH நிஸ்வான், P & T காலனி, மற்றும் முதல்வர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூடி)
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதன் பிறகு 1 ½ கோடிக்கும் மேற்பட்ட ஸலவாத்துகளை சமர்ப்பித்து துஆ ஓதப்பட்டது.

அதிகம் ஸலவாத் ஓதிய பாக்கியசாலிகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அல்ஹம்து லில்லாஹ்..

மொத்த ஸலவாத்துகளின் எண்ணிக்கை :

இந்த ஆண்டு நமது மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் சார்பாக ஆசிரியர்கள், மாணவிகள், குடும்பத்தார்கள், அந்தப் பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து ஓதிய மொத்த ஸலவாத்துகளின் எண்ணிக்கை  1,80,83,771 (ஒரு கோடியே எண்பது லட்சத்து எண்பத்து மூன்றாயிரத்து  எழுநூற்று எழுபத்து ஒன்று )
மாஷா அல்லாஹ் ! இப்பணி மறுமை வரைப் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதிகம் ஸலவாத் ஓதி 

முதல் 3 இடங்களைப் பிடித்த பாக்கியசாலிகள்

  1.  17 லட்சம்   : உம்மு ஹுசைன் (செய்யதலி பாத்திமா)
  2.  16 லட்சத்து 48 ஆயிரத்து 534 : உம்மு சுமைய்யா (செய்யதலி பாத்திமா)
  3.  14 லட்சத்து 20 ஆயிரம்  : உம்மு அஸ்லம் (செய்யதலி பாத்திமா)


10 இலட்சத்திற்கும் அதிகமாக ஸலவாத் ஓதியவர்கள்

ஷரிஃபா ஆலிமா  13,70000 பதிமூன்று லட்சத்து எழுபதாயிரம்

ஷம்சுத்தீன் மஸ்லஹி ஹழ்ரத் குடும்பம் 11,10000 (பதினொரு லட்சத்து பத்தாயிரம்)

ஸாஃப்ரின் பர்வீன் 10,94000 (பத்து லட்சத்து தொண்ணூற்று நான்காயிரம்)

திருக்குர்ஆன் ஓதி (கத்தம்) நிறைவு செய்தவர்கள்
  1. மன்பவுல் ஹஸனாத்  நிஸ்வான் அரபிக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள்  சார்பாக 3 குர்ஆன்
  2. ஃபைரோஸ் பேகம் முபல்லிஹா முஹ்ஸினா 1 குர்ஆன்
  3.  கதீஜா 1 குர்ஆன்
  மொத்தம் 5 குர்ஆன் ஓதி நிறைவு செய்து வைத்திருந்தார்கள்.

இவை அனைத்தும் கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்காகவும் நபிமார்கள், வலிமார்கள், நம்மை விட்டு பிரிந்து சென்ற நம் முன்னோர்கள் அனைவருக்காகவும் ஈஸால் ஸவாப் செய்யப்பட்டு உலக மக்களின் நலனுக்காக பிரார்த்தனை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியர்கள், ஆலிமாக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments:

Post a Comment