Thursday, October 28, 2021

நபி வாழும் மா மதினா - Nabi Vaazhum Maamadhina Tamil Islamic Song


 நபி வாழும் மா மதினா
நான் அங்கு வருவேனா
பூ மணக்கும் உங்கள் ரவ்ளா
கண்ணால் நான் தழுவேனா
நபி உம்மைக் காணத்தான் 
என் ஜீவன் வாழுது 
விடுகின்ற மூச்செல்லாம் 
உம் வதனம் தேடுது
நபி உம்மைக் காணாமல் 
வாழ்வும் அது வலிக்கிறது
விடுகின்ற மூச்செல்லாம் 
கசப்பாகத் தெரிகிறது

என் விழிகள் மூடிக் கொண்டு
உம் முகத்தைத் தேடினேன்
கண் திறந்து பார்க்கின்றேன்
கண்ணீர் சுரக்க நிற்கின்றேன்
கண்ணீரும் ஓடியதே 
காருண் நபி முகம் காண
ஓடிய நீர் வாடியதே 
காணவில்லை உம் முகமே

நான் கண்ட கனவெல்லாம் 
காற்றோடு கரைந்திடுமா
நபி உம்மைக் காணும் ஏக்கம் 
தீராமல் போய்விடுமா
நான் செய்யும் பாவங்கள்
திரையாய் வந்து நின்றிடுமா
நபி உங்கள் காதலினால் 
அந்த திரை கிழிந்து வழிவிடுமா

மரக்கட்டை ஏங்கியதே அதன்
ஏக்கங்களை தீர்த்தீரே
நான் இங்கு கதறுகிறேன்
என் கண் முன்னே வருவீரே
இல்லை என்ற வார்த்தையே 
மொழியா எந்தன் குருவே
பாவி எங்கள் ஏக்கம் தீர
திருக் காட்சி அருள்வீரே

No comments:

Post a Comment