மவ்லவி S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹிஅவர்கள் தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று 1988 ல் தஞ்சாவூர் ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில்சேர்ந்தார்கள். தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் 1992 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2002ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள். அதன் பின்னர் தாருல் உலூம் தேவ்பந்த் பல்கலைக் கழகத்தில் ஃபாழில் பட்டம் பெற்று மார்க்கச் சேவையில் நுழைந்தார்கள்.
🗓️ 25.09.2021 சனிக்கிழமை ⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
S. சுமைய்யா மிஃராஜ் (முதல் வருட ஆலிமா மாணவி தலைப்பு :- வெட்கம்
J.ரஜப் நிஷா ( முதல் வருட ஆலிமா மாணவி) தலைப்பு : - ஸலவாத்தின் சிறப்பு
S. ஸாஹின் பானு (முதலாம் ஆண்டு முபல்லிஹா மாணவி) தலைப்பு:- உறவைப் பேணுவோம்.
S. ஆமீனா (முதலாம் வருட முபல்லிஹா மாணவி) தலைப்பு:- ஆயத்தல் குர்ஸி
🎙️ சிறப்பு சொற்பொழிவு: மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள் (இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி) 📝 தலைப்பு: வேண்டுமா சுவனம்? வேண்டும் கவனம் !
⏰ மதியம் 3.45 மணிக்கு 📖 பூமான் நபி ﷺ அவர்களின் மீது புர்தா ஷரீப் ஓதப்படும்
⏲️ 4.30 மணிக்கு 🤲
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அழைப்பின் மகிழ்வில், *மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி. மேலும் விபரங்களுக்கு : 🌐https://mhniswan.blogspot.com
கஷ்டங்கள்
நீங்குவதற்கும் எதிரிகளை பலம் குன்றச் செய்வதற்கும் சுருக்கமாகச் சொன்னால் விரோதியை வெல்லவும் வியாதியை விரட்டவும் அற்புதமான
ஒரு டிப்ஸ்.
சுபுஹு தொழுகையின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் முதலாவது ரக்அத்தில்
அல்ஹம்து சூராவுக்குப் பிறகு அலம் நஷ்ரஹ் என்ற சூராவையும் இரண்டாவது
ரக்அத்தில் அல்ஹம்து சூரா வுக்குப் பிறகு அலம் தர கைஃப என்று சூராவையும்
வழமையாக ஓதி வந்தால் இந்தப் பலன்கள் கிடைப்பது நிச்சயம் சந்தேகமே வேண்டாம் !
யார் இந்த இரண்டு ரக்அத்துகளில் “அலம் அலம்” என்ற இந்த இரண்டு
சூராவையும் ஓதுகின்றாரோ அந்த நாளில் அவருக்கு எந்த المவலி வேதனை வருத்தமும் இருக்காது
இதை வழக்கப் படுத்திய நல்லவர்கள் பலரும் தங்கள் அனுபவத்தை
சொல்லி இருக்கிறார்கள் குறிப்பாக மூலவியாதி அதனுடைய வலியும் வருத்தமும்
குறைந்து முற்றிலும் இல்லாமல் போன அனுபவங்கள் உண்டு; பகைமை குறைந்து பாசம்
அதிகரித்த அனுபவங்கள் உண்டு!
அலி ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில்
கஷ்டத்தில் விழுந்தால் அதிலிருந்து விடுதலை ஆவதற்கு சொல்லும் வார்த்தையை உமக்குக்
கற்று தரட்டுமா?
அல்லாஹ்வின் தூதரே ! அவசியம் சொல்லித் தாருங்கள்!அல்லாஹ்
என்னையேதங்களுக்கு அர்ப்பணமாக ஆக்கட்டும்!எத்தனையோ நல்ல காரியங்களை நீங்கள் தானே எனக்கு கற்றுக் கொடுத்து
இருக்கிறீர்கள் அதே போல இதையும் சொல்லுங்கள்.
ஏதேனும் ஒரு கஷ்டத்தில் நீர் சிக்கிக்கொண்டால் சொல்ல
வேண்டிய வார்த்தை
أن رجلاً جاء إلى رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: تولت عني
الدنيا وقلت ذات يدي، فقال له رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فأين أنت من صلاة الملائكة وتسبيح الخلائق وبها يرزقون» ، قال فقلت: وما هي يا رسول الله؟ قال: «سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله مائة مرة ما بين
طلوع الفجر إلى أن تصلي الصبح، تأتيك الدنيا راغمة صاغرة، ويخلق الله من كل كلمة ملكاً يسبح الله إلى يوم القيامة لك ثوابه»
ஒரு தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே ! இந்த உலகம் என்னை விட்டும் முகம் திருப்பிக் கொண்டது..
பொருளாதாரம் குறைவாக இருக்கிறது" என்று முறையிட்டபோது
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : அனைத்து
வானவர்களும் ஓதக் கூடிய ஒரு பிரார்த்தனை, அனைத்து ஜீவராசிகளும் சொல்லக்கூடிய தஸ்பீஹ் ! அது உனக்கு தெரியாதா ? அதை அனைத்து படைப்புகளும் ஓதுகிற காரணத்தினால்தான் அவைகளுக்கு இரண பாக்கியம்
இறங்குகிறது
"நாயகமே ! அது என்ன ?"
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி சலாம் சொன்னார்கள்
سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله
இதை ஒவ்வொரு நாளும் ஃபஜ்ரு உதயமாகும் நேரம் தொடுத்து பஜ்ரு
தொழுகை முடிகிற அந்த நேரத்திற்குள் நூறு தடவை வழமையாக ஓதி வா ! இந்த உலகம் உனக்காக
பணிந்து வரும் !"
அவர் சொல்கிறார்: இதை அந்த குறிப்பிட்ட நேரத்தில் நான்
வழமையாக ஓதிவந்தேன். என்ன ஆச்சரியம் ! அல்லாஹ் என் மீது இரண பாக்கியத்தை அள்ளிக்
கொட்டினான். இப்பொழுது நிறைய குவிந்து விட்டது அந்த செல்வத்தை எல்லாம் எங்கே
வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சிறிது நாளைக்கு முன்பு வரை அல்லாஹ்வின் தூதரே எனக்கு என்ன
வழி தெரியவில்லை என்று கவலையோடு வந்தார். இப்பொழுது சொல்லுகிறார் பணத்தை எங்கே
வைப்பது என்றே தெரியவில்லை என்று
அவருடைய வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போனதற்கு என்ன காரணம் ? அவர் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து வழமையாக ஓதி வந்த அந்ததிக்ருதான் !
அல்ஹம்துலில்லாஹ் நமது மன்பவுல் ஹஸனாத் மதரசாவில் கடந்த 11 செப்டம்பர் 2021 சனிக்கிழமை அன்று மதியம் சிறப்பு நிகழ்ச்சியாக புனித கஸீதத்துல் புர்தா ஓதப்பட்டு சிறப்பு துஆ செய்யப்பட்டது
நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துகள் அதிகம் ஓதுவதன்
மூலமும் புனித கஸீதத்துல் புர்தா ஓதுவதன் மூலமும் அபிவிருத்திகள்
அதிகமாகிய வரலாறுகள்,