அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் கிருபையினால் இன்று (05.10.2024) மாலை அஸர் தொழுகைக்கு பின் ஸலவாத் சமர்ப்பணம் மஜ்லிஸ் நமது மதரஸாவின் தலைவர் சங்கைமிகு மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் S.முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் மகிச் சிறப்பாக நடந்து முடிந்தது.
ஸலவாத் ஓதுவதின் பலன்கள் குறித்து மரியாதைக்குரிய நமது மதரஸாவின் ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து ரஹ்மத்துல்லாபுரம் ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் சங்கைமிகு மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் M. S முஹம்மது இஸ்மாயீல் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பான துஆ ஓத மஜ்லிஸ் நிறைவு பெற்றது.
தொடர்ந்து ரஹ்மத்துல்லாபுரம் ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் சங்கைமிகு மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் M. S முஹம்மது இஸ்மாயீல் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பான துஆ ஓத மஜ்லிஸ் நிறைவு பெற்றது.
மஜ்லிஸில் ஈஸால் ஸவாப் செய்யப்பட்ட குர்ஆன்: 8
ஸலவாத் எண்ணிக்கை: 1,76,8000 (ஒரு கோடியே எழுபத்தாறு இலட்சத்து எட்டாயிரம்)
மஜ்லிஸின் நிறைவில் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக அதிகமாக ஸலவாத் ஓதிய 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஸலவாத் மஜ்லிஸில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றும் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற எல்லா வகையான உதவிகளையும் வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நிறைவான நற்கூலியை ஈருலகிலும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் வழங்கி அருள்வானாக!
இதுபோன்ற மஜ்லிஸில் கலந்து கொண்டு நபியின் அன்பையும் ஷஃபாஅத்தையும் பெறக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
ஜஸாகல்லாஹூ கைரன் கஸீரன் ஃபித்தாரைன்.
நன்றியுடன்,நிர்வாகம்,
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி p&t காலனி, தூத்துக்குடி.

No comments:
Post a Comment